நீட், ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்! மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவம் படிப்பதற்கான தகுதியை பெறுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள், மற்றவர்களைப் போலவே, தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/பயோடெக்னாலஜி ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். NEET 2024 இல் கலந்து கொள்ள இந்திய விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 17 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
அதுபோல, நாட்டின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிராதான இடத்தைப் பெற்றுள்ளன. இந்த கல்வி நிறுவனங்களல் சேருவதற்கு ஜேஇஇ தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது. மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE – Advanced) பங்கு பெற முடியும்.
இந்த நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு கு கோச்சிங் கொடுக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்தியஅரசு வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி,
16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை.
16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.
விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.