வறுமை கோட்டில் இருந்து 9 ஆண்டில் 24.82 கோடி பேர் வெளியேற்றம்.. நிதி ஆயோக் தகவலை சாடிய காங்கிரஸ்
டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டு பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர் என நிதி ஆயோக் தெரிவித்துள்ள நிலையில் அது பொய் எனக்கூறி காங்கிரஸ் கட்சி முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளதோடு, நிதி ஆயோக்கை கடுமையாக சாடியுள்ளது.
இந்தியாவில் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு நிதி ஆயோக் தரப்பில் இந்தியாவில் ஏழ்மை நிலை குறித்த தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்த நிதி ஆயோக் என்பது சுகாதாரம், நீராதாரம், வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நிதி ஆயோக் சார்பில் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி 2022-2023ம் ஆண்டில் 11.28 சதவீதமாக வறுமை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டு பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் முன்னேறியுள்ளனர்.
அதேபோல் கடந்த 2013-2014 காலத்தில் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை என்பது 29.17 சதவீதமாக இருந்தது. இதுபற்றி 2014ல் ரங்கநாதன் கமிட்டி கூறுகையில் மக்கள்தொகை அடிப்படையில் கந்த 2009-2010ல் 45.4 கோடி (மொத்த மக்கள்தொகையில் 38.1 சதவீதம்) பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்ததாகவும், இது கடந்த 2011-2012ல் 36.3 கோடியாக (29.5 சதவீதம்) சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 2022ல் உலக வங்கி ஆய்வின்படி இந்தியாவில் ஏழ்மை நிலை என்பது 2011-2019 காலக்கட்டத்தில் 12.3 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நிதி ஆயோக்கின் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், ”இந்தியாவில் வறுமை என்பது 11.7 சதவீதம் ஆக குறைந்துள்ளதாக நிதி ஆயோக்க கூறியுள்ளது. அப்படி என்றால் இந்திய மக்கள்தொகையில் 15 கோடி மக்கள் மட்டுமே ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு ஏன் ரூ.80 கோடி இலவச ரேஷன் வழங்குகிறது” என்றார்.
யூபிஏ அரசின் திட்டங்கள் வறுமை ஒழிப்புக்கு வழிவகுத்துள்ளது. அதனடிப்படையில் தான் உலக வங்கி அறிக்கை வழங்கியுள்ளது. மேலும் இலவச ரேஷன் திட்டத்தில் இருந்து பொதுமக்களை வெளியே எடுக்க இந்த நிதி ஆயோக்கின் அறிக்கை என்பது பயன்படுத்தப்பட உள்ளது” என்றார்.