போனில் *401# டயல் செய்தால் மிக பெரிய ஆபத்து. மக்களே உஷாரா இருங்க.. எச்சரிக்கை..!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி *401#என்ற குறிப்பிட்ட மொபைல் எண்ணை டயல் செய்வதால் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் முதலில் பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும் அதனை டெலிவரி செய்ய வேண்டிய நபர் முகவரியை தடுமாற்றத்தால் தவித்து வருவதாகவும் அவரை உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு வழிகாட்டுமாறும் கூறுகின்றனர். அதன் பிறகு அழைப்பிற்காக மொபைல் எண் ஒன்றை வழங்குவதோடு அதற்கு முன்பாக*401#என்ற எண்ணிற்கு டயல் செய்யவும் கூறுகிறார்கள்.
இந்த அழைப்பை ஏற்படுத்திய பிறகு சைபர் கிரிமினல்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெறுகின்றனர். இந்த மோசடியை கண்டுபிடித்த இந்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது செல்போன் பயன்படுத்துவோர் எக்காரணம் கொண்டும் இந்த எண்ணிற்கு அழைக்கக்கூடாது எனவும் இந்த அழைப்புகள் ஆன்லைன் மூலமாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் சற்று கவனமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.