அதிர்ச்சி வீடியோ… படகில் சென்ற 14 பள்ளி மாணவர்கள் பலி… சுற்றுலா சென்ற போது சோகம்… !
குஜராத் மாநிலம் வதோதராவில் சன்ரைஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 23 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் வதோதராவில் உள்ள ஹர்ணி குளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்த குளத்தில் வதோதரா மாநகராட்சி மற்றும் கோட்டியா என்ற நிறுவனம் சார்பில் படகு போக்குவரத்து செயல்பட்டு வந்தது. அங்குள்ள படகில் 15 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்ற நிலையில், 27 பேரும் ஒரே படகில் ஏறினர். குளத்தின் நடுவே படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஏரியில் விழுந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், உடனடியாக தண்ணீருக்குள் குதித்து தண்ணீரில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் 14 மாணவர்கள் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 12 பேர், 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மேலும் 4 சிறுவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.