தமிழ்நாட்டுக்கு வரும் HCL – Foxconn சிப் தொழிற்சாலை.. விடாமல் துரத்தும் தெலுங்கானா..!

ந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசுகளும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் வேளையில் முதல் தொழிற்சாலையைக் குஜராத் மாநிலம் அமெரிக்காவின் மைக்ரான் மூலம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் முதல் முறை வேதாந்தா உடனான முயற்சியில் செமிகண்டக்டர் ரேசில் தோற்றுப்போன பாக்ஸ்கான் 2வது முறையாக எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் ஹெச்சிஎல் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்தக் கூட்டணி இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தயாரிக்காமல் OSAT தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இக்கூட்டணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும், பங்கீடுகள் குறித்தும் பேசப்பட்டு வரும் வேளையில்.. இத்தொழிற்சாலை எங்கு அமைக்கப்படப்போகிறது என்ற முக்கியமான கேள்வி உள்ளது.தற்போது ஹெச்சிஎல் – பாக்ஸ்கான் கூட்டணி தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் கர்நாடகாவும் இக்கூட்டணியிடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹெச்சிஎல் – பாக்ஸ்கான் கூட்டணி அதிகப்படியான மானியம் அளிக்கும் தமிழ்நாடு அல்லது தெலுங்கானாவில் துவங்க உள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே பாக்ஸ்கான் மிகப்பெரிய உற்பத்தி தளத்தை வைத்திருக்கிறது, ஹெச்சிஎல் நிறுவனம் தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான ஊழியர்களை வைத்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இதேபோக ஹெச்சிஎல் ஷிவ் நாடார் ஒரு தமிழர், ஹெச்சிஎல் டெக் நிறுவன சிஇஓ சி.விஜயகுமார் ஒரு தமிழர், இதைத் தாண்டி சமீபத்தில் தான் ஹெச்சிஎல் குழும தலைவர் ரோஷ்னி நாடார் டாவோஸ்-ல் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா அவர்களைச் சந்தித்தார்.இப்படியிருக்கையில் தெலுங்கானா அரசு மிகவும் திறம்பட ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது, இதில் அதிகப்படியான மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் OSAT தொழிற்சாலை அமைக்க நிலம், மின்சாரம், சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பல விஷயங்கள் உள்ளது, கூடுதலாக மானியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.மேலும் பாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதூர்-ல் மாபெரும் தொழிற்சாலை வைத்துள்ளது, இதனால் இப்புதிய OSAT தொழிற்சாலையும் இதே பகுதியில் அமைத்துவிட்டால் மிகப்பெரிய அளவில் அதன் நிர்வாகத்திற்குப் பலன் அளிக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *