அறுவை சிகிச்சைக்கு பிறகு ரோகித் சர்மாவின் சரவெடி, அதிரடி பேட்டிங்கை கண்டு ரசித்த சூர்யகுமார் யாதவ்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 3ஆவது டி20 போட்டி 17ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, விராட் கோலி, 0, ஷிவம் துபே 1, சஞ்சு சாம்சன் 0 என்று வரிசையாக இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதி கலங்கச் செய்தனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

பின்னர் வந்த ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஜத்ரன் 50, ரஹ்மானுல்லா குர்பாஸ் 50 ரன்கள் எடுத்துக் கொடுக்க, குல்பதீன் நைப் கடைசி விளையாடி 55 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்தியப் போட்டியானது டிரா ஆனது. அதன் பிறகு முதல் சூப்பர் ஓவர் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியும் 16 ரன்கள் எடுக்க டிரா செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2ஆவது சூப்பர் ஓவர் நடந்தது. இதில், இந்தியா 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஆப்கானிஸ்தான் ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி வாகை சூடியது. அது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் தென் அப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்ட நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அவருக்கு இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடுப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் காட்சியை தனது டேப்லெட்டில் பார்த்து மகிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *