ஜனவரி 23ல் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி.. பக்தர்கள் உற்சாகம்… !

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு மலையேறி சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்ய சிவபக்தர்கள் அனைத்து நாட்களும் சென்று கொண்டிருந்தனர்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக மழை மற்றும் வானிலை காரணமாக மலையேற வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என கோவில்நிர்வாகமும் வனத்துறையும் அறிவித்துள்ளது.அதன்படி இந்த நாட்களில் காலை 7:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *