நாகூர் தர்கா விழாவில் கலந்துகொள்ள ஆட்டோவில் வந்திறங்கிய பிரபல இசையமைப்பாளர்!
உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 வது கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 16ஆம் தேதி சந்தனம் அரைக்கும் பணிகளும் 21 ஆம் தேதி இரவு வான வேடிக்கை நிகழ்ச்சியும் 22 ஆம் தேதி கடற்கரையில் பீர் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நடைபெற்றது. நாகை அபிராமி அம்மன் திடல் அருகே வடிவமைக்கப்பட்ட அலங்கார ரத்தங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் நேற்று வந்திருந்தார்.
பின்னர் அவர் சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கு முன்னதாக நாகூர் தர்காவுக்கு தமிழக ஆளுநர் ஆா்.என். ரவி நேற்று காலை வருகை புரிந்தார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி தர்கா மணிமேடையில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.