இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்
ராவணன் குபேர பட்டிணத்துக்கு அருகே
இருந்த நேரம்,
அந்த வழியாக குபேரனின் மருமகள் ரம்பா போய்க்கொண்டு இருந்தார்.
அவளை சிறை பிடித்த ராவணன்
தகாத செயல்களை
செய்ய ஆசைகொண்டார்.
“தான் நளகுபேரனின் மனைவி ரம்பா,
குபேரனின் மருமகள் என்னை விட்டு விடுங்கள்” என்றார்.
நீ ஒன்றும் எனது மகன் இந்திரஜித்தின் மனைவி இல்லை.
அப்படி இருந்தால் நான் உன்னை இங்கே இருந்து போகச் சொல்லி இருப்பேன் என்றார்.
தனது உடல்பசியால் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் புலன்கள் முடக்கப்பட்ட
ராவணன்,
அவளை அவளது விருப்பம் இல்லாமல்
வன்புணர்வு செய்கின்றார்.
ரம்பா அழுதபடி அரண்மனை திரும்பினார்.
தனது கணவன் நளகுபேரனிடம்
நடந்தவைகளை சொன்னார்.
உனது விருப்பத்திற்கு மாறாக நடந்த செயல்களை மறந்து விடு!
நான் அதனை இனி நினைக்கவே மாட்டேன்!
நீயும் நினைக்க வேண்டாம்
என சொல்லி அவளை தேற்றினார்.
நேரே ராவணனின் முன் சென்ற
நளகுபேரன்
கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து அவரது தலைமேல் தெளித்து சாபம் கொடுத்தார்.
“இனி உனது ஆசைகளை
நீ வற்புறுத்தி எந்த பெண்ணிடமும் பெறக்கூடாது.
அப்படி தவறும் பட்சத்தில் உனது தலை சுக்கு நூறாக வெடித்து சிதறும்” என்றார்.
இராவணன் முதன் முதலாக சாபத்தை கண்டு பயந்தார்.
அதனால் தான் சீதையை இராவணன் வற்புறுத்தவில்லை