இன்று தை வெள்ளிக்கிழமை… மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று முதல் கூட இந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்க துவங்கலாம்.

மறந்தும் இந்த விஷயங்களைச் செய்யாதீங்க. அதன் பிறகு உங்கள் வாழ்க்கை ஏற்றம் பெறுவதை உணர்வீர்கள். நாள், கிழமைகள் உதவுகிறதைப் போல அண்ணன், தம்பி கூட உதவ மாட்டாரகள் என்பார்கள். அதனால, வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீங்க. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் உங்கள் கைகளில் தங்க மறுக்கிறதா? மறந்தும் இந்த விஷயங்களை எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் செய்யாதீங்க. ஏனெனில், மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.

நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க… அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். அப்புறம் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *