Actress Rashmika mandanna: அதற்காக காத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஆனா அடுத்த மாசம்தான்!
நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா 2, தனுஷுடன் டி51 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் அனிமல் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள தனுஷ் -சேகர் கம்முலா படத்தில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் போடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பறந்து பறந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா, தமிழில் சுல்தான், வாரிசு படங்களை தொடர்ந்து தற்போது தனுஷுடன் டி51 படத்தில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜூனாவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். தற்போது அவரது காட்சிகளைதான் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங்கில் தனுஷ் வரும் 24ம் தேதி முதல் பங்கேற்கவுள்ளார். ராஷ்மிகா அடுத்த மாதத்தில்தான் இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நாயகியாக அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரன்வீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடப்பில் வெளியான அனிமல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பின்னி பெடலெடுத்தது. இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பும் மிகப்பெரிய வரவேற்புகளை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கியுள்ளது.
தனுஷின் டி51 படம்: தனுஷின் டி51 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ள நிலையில் படத்தில் தனுஷுடன் நாகார்ஜூனாவும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். தற்போது ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் நடிகர் நாகார்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங்கை இன்னும் சில தினங்களில் முடித்துவிட்டு, டி51 படத்தின் சூட்டிங்கில் வரும் 24ம் தேதி முதல் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, படத்தின் சூட்டிங்கில் அடுத்த மாதம்தான் தான் இணையவுள்ளதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா உற்சாகம்: தனுஷுடன் டி51 படத்தில் இணைந்துள்ளது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தனுஷ் மிகச்சிறந்த பர்ஃபார்மர் என்றும் அவருடன் இணைந்து நடிக்க தான் அதிகமாக விரும்பியதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார். மிகச்சிறந்த பர்ஃபார்மருடன் இணைந்து பணியாற்றுவதன்மூலம் அதிகமான விஷயங்களை தான் கற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இதுவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். சேகர் கம்முலா இந்தப் படத்தின் கதையை கூறியவுடனேயே தான் ஓகே சொன்னதாகவும் ராஷ்மிகா மேலும் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல்?: அடுத்த மாதத்தில்தான் இந்தப் படத்தின் சூட்டிங்கில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் சூட்டிங்கிற்காக தான் காத்திருப்பதாகவும் ராஷ்மிகா உற்சாகம் தெரிவித்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் மற்றும் விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அவருடைய கேரியர் பெஸ்ட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருபுறம் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகாவிற்கு காதல் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் பிப்ரவரி முதல் வாரத்தில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.