படுக்கைக்கு அழைத்தால் நோ சொல்லமாட்டேன்.. முத்தம் கொடுப்பேன்.. ஷாக் கொடுத்த நடிகை
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படம் டூரிங் டாக்கீஸ். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாப்ரி கோஷ். ஒரு சில படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது சீரியலில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களி திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.
ஹீரோயின்களின் ஓபன் டாக்ஸ்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
வாரிசு நடிகையிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது. தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெட்ஸ்ட்மெண்ட் அப்ரோச் குறித்து ஓபனாக பேசிவருகிறார்கள்.
பாப்ரி கோஷ்: அந்தவகையில் பிரபல இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பாப்ரி கோஷ் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “என்னிடம் வந்து யாராவது ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு தர முடியும் என்று சொன்னால் நான் முடியாது என்று சொல்லமாட்டேன்.
வீட்டுக்கு செல்வேன்: என்னை அட்ஜெட்ஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன நபரின் வீட்டுக்கு நேராக செல்வேன். சென்ற பிறகு அவரது குடும்பத்தார் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு முன்பே வைத்து அந்த நபருக்கு நான் முத்தம் கொடுப்பேன். அதை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் ஏன் இப்படி செய்த என்று கேட்பார்கள். அப்போது, ‘உனக்கு பட வாய்ப்பு தருகிறேன். அட்ஜெட்ஸ்ட்மெண்ட் செய் அவர் சொன்னார். அதனால்தான் முத்தம் கொடுத்தேன் என்று சொல்வேன். பிறகு அந்த நபரை அவரது குடும்பத்தினரே நன்றாக கவனித்துக்கொள்வார்கள்” என்றார்.
யார் இந்த பாப்ரி கோஷ்: பாப்ரி கோஷ் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு பெங்காலி மொழியில்தான் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார். பிறகு தெலுங்கு மொழியில் நடிகையாக அறிமுகமான அவர் தமிழில் எஸ்.ஏ.சி மூலம் அறிமுகமானார். டூரிங் டாக்கீஸ் படத்துக்கு பிறகு ஓய், சக்கைப்போடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவருக்கு வெள்ளித்திரை சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை. இதனையடுத்து சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் நாயகி, சுந்தரி, கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.