உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப கற்றாழையை வெச்சு இப்படி ஹேர் பேக் போடுங்க…

Hair Care Tips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தினாலும் நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக நிறைய பேர் தலைமுடி உதிர்வை சந்திப்பதோடு, பலரது தலைமுடி எலிவால் போன்று மெலிந்து அடர்த்தியின்றி உள்ளது.

ஒருவரது தலைமுடி அடர்த்தியிழந்து உள்ளது என்றால், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை என்று அர்த்தம். இந்நிலையில் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும் ஒருசில ஹேர் பேக்குகளை போட்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அதுவும் உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அந்த கற்றாழை ஜெல்லுடன் ஒருசில பொருட்களை சேர்த்து ஹேர் பேக் போட்டு வந்தால், விரைவில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கலாம். இப்போது தலைமுடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சில கற்றாழை ஹேர் பேக்குகளைக் காண்போம்.

1. தயிர் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் கற்றாழை ஜெல், தயிர் மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 1 கப்

* ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

* இந்த ஹேர் பேக்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

3. விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 1 கப்

* விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெந்தய பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் கற்றாழை ஜெல், விளக்கெண்ணெய் மற்றும் வெந்தய பவுடர் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை இரவு தூங்கும் முன் தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி மாதத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், முடி நன்கு வளர்ச்சி அடையும்.

4. செம்பருத்தி மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 1 கப்

* செம்பருத்தி பூ பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் செம்பருத்தி பூ பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலையில் நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

5. முட்டை மற்றும் கற்றாழை ஹேர் பேக்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* முட்டை – 1

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *