U-19 உலக கோப்பை – இந்திய அணியில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. நாளைய நட்சத்திரங்கள் யார்?

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

இந்த தொடரை இந்திய அணி 5 முறை கைப்பற்றி உள்ள நிலையில் ஆறாவது முறையாக தொடரை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. யுவராஜ் சிங், விராட் கோலி போன்ற பல ஜாம்பவான்கள் இந்த தொடர் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடப்பு சீசனில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆர்சின் குல்கர்னி. அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கும் ஆர்சின் குல்கர்னி ஹர்திக் பாண்டியா போல் சிறப்பாக செயல்படக் கூடியவராக இருக்கிறார். ஏற்கனவே இவருடைய ஆட்டத்தை பார்த்து ஐபிஎல் மினி ஏலத்தில் லக்னோ அணி இவரை வாங்கி இருக்கிறது.

கடந்த ஐந்து இன்னிங்ஸில் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடிய குல்கர்னி 206 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163 என்று அளவில் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் முசிர் கான். பிரபல கிரிக்கெட் வீரர் சர்பிராஸ்கானின் சகோதரராக முசிர் கான் விளங்குகிறார்.

சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளங்கும் முசிர்கான் மும்பை அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியை ஏற்கனவே விளையாடிவிட்டார். வினோத் மான்கெட் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் முசிர் கான் பெற்றிருக்கிறார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆரவல்லி அவினாஷ். இவர் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருக்கிறார்.

விக்கெட் கீப்பரான இவர், இந்திய ஏ அணிக்காக கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற போட்டி ஒன்றில் 93 பந்துகளில் 163 ரன்கள் விளாசினார். இந்திய அணியின் கேப்டனாக களம் இறங்கி இருப்பவர் உதய் சரண். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற U19 போட்டியில் 104 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இலங்கைக்கு எதிராக அரை சதமும் அடித்தார். இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆதார் சிங். தொடக்க வீரராக களம் இறங்கும் இவர் 6இன்னிங்ஸில் 308 ரன்கள் அடித்து இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *