உங்களுக்கு அவித்த முட்டை ரொம்ப பிடிக்குமா? சரியாக முட்டை வேக வைப்பது எப்படி?

நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் முட்டைகளை சரியாக வேக வைப்பதும், அதிலிருந்து ஓடு உரிப்பதும் எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.

நன்கு வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி பச்சை வளையம் இருக்காது, அதன் உட்புறம் கிரீமி மற்றும் மென்மையாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

முட்டை சரியாக வேக வைப்பது எப்படி?                          

கபிதாஸ் கிச்சன் புகழ் கபிதா சிங், முட்டை வேக வைக்கும் போது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். 10 நிமிடங்களுக்கு மேல் முட்டைகளை வேகவைக்க கூடாது என பரிந்துரைக்கிறார்.

தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைப்பது மற்றொரு பிரபலமான முறை. இது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

முட்டை ஓடு உரிப்பது எப்படி?

முட்டைகளை வேகவைத்து குளிர்ந்த பிறகு மெதுவாக உடைத்து ஓடு உரிக்க வேண்டும். இது எளிதாக உரிக்க உதவுகிறது.

மற்றொரு வழி, அவற்றை மெதுவாக உடைத்து, பின்னர் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்க வேண்டும்.

குறிப்பு: ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகள், புதிய முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *