AUS vs WI 1st test- மேற்கிந்திய தீவுகளை பொளந்த டிராவிஸ் ஹெட்..10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராட்வெயிட் 13 ரன்களிலும் , தேஜ் நரைன் சந்தர்பால் 6 ரன்களிலும் ஆட்டம் இழக்க மெக்கன்சி மட்டும் பொறுப்பாக விளையாடி அரை சதம் கடந்தார்.

இறுதியில் சமர் ஜோசப் 36 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ஸ்மித் 12 ரன்களிலும், உஸ்மான் கவஜா 45 ரன்கள் மிட்செல் மார்ஷ் ஐந்து ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

எனினும் தனி ஆளாக போராடிய டிராவிஸ் ஹெட் அபாரமாக நின்று 119 ரன்களை குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 283 ரன்கள் எடுத்தது அறிமுக வீரராக களம் இறங்கிய சமர் ஜோசப் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த மெக்கன்சி மட்டும் 26 ரன்களும், ஜஸ்டின் ரீவிஸ் 24 ரன்களும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.இரண்டாவது இன்னிங்ஸில் ஹெசல்வுட் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனை அடுத்து 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவர்லே வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *