சோள உருண்டை சோறு : இப்படி செய்யுங்க: செம்ம ருசியாக இருக்கும்
சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு திருமணத்தில், இந்த சோள உருண்டை சோறு செய்யப்பட்டது. அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
கால் கிலோ சோளம்
4 டம்ளர் தண்ணீர்
உப்பு
சின்ன வெங்காயம் 10 நறுகியது
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு
நெய் 2 ஸ்பூன்
செய்முறை : சோளத்தை மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். குக்கரில் இதை சேர்த்து, தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும். வெந்ததும், சூடு ஆறும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்க்கவும். சாம்பார் பொடி சேர்த்து கிளரவும். தற்போ இதில் சாதத்தில் சேர்த்து கிளரவும். தற்போது இதை உருண்டை பிடித்துகொள்ளவும்.