மொறு மொறு பிரட் ஸ்நாக்ஸ்: இப்படி செய்து பாருங்க
மொறு மொறு பிரட் ஸ்நாக்ஸ், இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
தயிர் 1 கப்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
கடலை மாவு கால் கப்
உப்பு
கொத்தமல்லி ஒரு கொத்து
எண்ணெய் 2 ஸ்பூன்
பிரட் 8
செய்முறை : பிரட்டின் ஓரங்களை நீக்க வேண்டும். சிறிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், சீரகம், சோம்பு, கொத்தமல்லி தழை, மஞ்சள் பொடி மிளகாய் பொடி, கடலை மாவை, உப்பு சேர்க்கவும். தொடர்ந்து பிரட்டின் ஒரு பக்கம் இதை நிரப்ப வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பிரட்டை வைக்கவும். ஒரு பக்கம் வேகும்போதும் மறுப்பக்கம் மீண்டும் இந்த கலவையை வைக்கவும். இரண்டு பக்கமும் மொறு மொறுப்பாக வேக வேண்டும். இதை தட்டி வைத்து, அதற்கு மேலாக எண்ணெய் கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.