சோதனையில் சிக்கிய பெண் ஆய்வாளர்.. கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த 6 லட்சம் பறிமுதல்..!

வேலூர், காட்பாடியை அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதி போக்குவரத்து சோதனைச் சாவடியில் முறைகேடாக பணம் வசூல் செய்வதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 10ம் தேதி பெண் ஆய்வாளர் வசந்தியின் காரை விஜிலென்ஸ் போலீசார் சோதனை செய்தனர். காரில் இருந்த வெள்ளை கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் கணக்கில் வராத முறைகேடாக சம்பாதித்தவை என்பது தெரியவந்தது. பின்னர், அறிக்கையின் நகல் மற்றும் எப்.ஐ.ஆர்., போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து துறை ரீதியான விசாரணைக்கு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி முறைகேடாக பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் இன்று உத்தரவிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *