ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது.. இந்தியா இங்கிலாந்து தொடரை எந்த சேனலில் பாக்கலாம்? – ஒளிபரப்பு விவரம் இதோ
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வட்டத்திற்குள் இருப்பதினாலும், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 25-ஆம் தேதி துவங்கும் இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரானது எந்தெந்த தேதிகளில் நடைபெறுகிறது? இந்த தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை விசாகப்பட்டினம் நகரிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ராஜ்கோட்டிலும் நகரிலும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை ராஞ்சியிலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை தர்மசாலா நகரிலும் நடைபெற இருக்கிறது.
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை “ஸ்போர்ட்ஸ் 18” தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதால் இந்தியாவில் இந்த டெஸ்ட் தொடரினை காண விரும்புவோர் “ஸ்போர்ட்ஸ் 18” தொலைக்காட்சியின் மூலம் போட்டிகளை நேரலையில் கண்டு களிக்கலாம். அதோடு ஆன்லைன் வழியாக போட்டிகளை காண விரும்புவோர் ஜியோ சினிமாஸ் ஆப்பின் மூலம் கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.