NZ vs PAK: நியூசிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் கான்வேவிற்கு கொரோனா தொற்று.. ரசிகர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் ஆடி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
கான்வேவிற்கு கொரோனா:
இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் கான்வேக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கான்வேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கிறிஸ்ட்சர்ச்சில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் 4வது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலையை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், மருத்துவ குழுவினரும் கண்காணித்து வருகின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு பதிலாக அணியில் சாத் போவ்சை அணியில் சேர்த்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதை டி20 தொடரில் கான்வேவின் பேட்டிங் சிறப்பானதாக அமையவில்லை. அவர் முதல் போட்டியில் டக் அவுட்டும், 2வது போட்டியில் 20 ரன்னும், மூன்றாவது போட்டியில் 7 ரன்னும் மட்டுமே எடுத்தார்.