காதலித்து ஏமாற்றி இன்னொருத்தனுடன் சுற்றிய நந்தினி… கொடூரமாக கொன்றதாக காதலன் வாக்குமூலம்!
என்னை காதலித்து விட்டு, ஏமாற்றி விட்டு, இன்னொருத்தனைக் காதலித்து வந்ததால், ஆத்திரத்தில் நந்தினியைக் கொடூரமாக கொலைச் செய்ததாக முன்னாள் காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் தந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னையில் ஐடி நிறுவன ஊழியர் இளம்பெண் நந்தினி, கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, எரித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தன்னை காதலித்து விட்டு, பின்னர் நிராகரித்து, வேறு ஒருவனைக் காதலித்ததால் காதலி நந்தினியைக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரிய வந்ததது,
இந்த கொலை தொடர்பாக நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றி (28)என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் விசாரணையில் வெற்றி, “மதுரையில் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே நந்தினியை ஐந்து வருடமாக காதலித்து வந்தேன். எனக்கு தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருந்ததை அறிந்த நந்தினி என்னை திருநங்கை என்று கூறி நிராகரித்து விட்டார். ஆனால் நண்பர்களாக இருப்போம் என்ற அடிப்படையில் நந்தினியுடன் அதன் பிறகு பழகி வந்தேன்.
என்னை வெறுத்த நந்தினி, ராகுல் என்பவரைக் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். ராகுல் உடனான காதலை துண்டித்துக் கொள்ளுமாறு நந்தினியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். அதனை நந்தினி பொருட்படுத்தவில்லை.
இதனால் அவரை கொலை செய்வதென்று முடிவெடுத்தேன். நேற்று நந்தினியின் பிறந்தநாள் என்பதால் கோயிலுக்கு நந்தினியுடன் சென்று விட்டு, ஆதரவற்ற இல்லத்தில் உணவு வழங்கினோம். பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு சென்றதும், நந்தினியின் கைகால்களை சங்கிலியால் கட்டிய பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். வலி தாங்க முடியாது நந்தினி கத்தியதால், கையோடு எடுத்து சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தேன்” என்று வாக்கு மூலம் தந்துள்ளார்.