8 விமானங்கள், 700 கார்கள், ரூ 4000 கோடி அரண்மனை: உலகிலேயே பெரும் பணக்கார குடும்பம் இவர்கள்

ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார்.

எண்ணெய் இருப்புக்களில் 6 சதவிகிதம்

Al Nahyan குடும்பத்திற்கு சொந்தமாக 8 விமானங்கள் மற்றும் உலகிலேயே பணக்கார கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது. ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள்.

மட்டுமின்றி, ஜனாதிபதிக்கு 9 பிள்ளைகளும் 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவிகிதம் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, Manchester City கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம். உலகில் பிரபலமான பல நிறுவனங்களில் Al Nahyan குடும்பம் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்கின் Space X நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *