தன் திருமணம் நடந்த இடத்திலேயே தாயாருக்கு இறுதி விடை கொடுக்கும் மெலானியா டிரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் First Lady மெலானியா டிரம்ப்பின், தாயார் அமலிஜாவுக்கு பாம் பீச் தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலானியா டிரம்ப்பின் தாயார் இறப்பு
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலானியா. இவரது தயாரான Amalija Knav கடந்த 9ஆம் திகதி காலமானார்.
அவருக்கு Palm Beach தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்டு டிரம்பிற்கும், மெலானியாவுக்கும் திருமணம் நடந்தது.
தன் கணவருடன் சேர்ந்து தேவாலயத்தில் தனது தாயாரை இறுதியாக மெலானியா வழியனுப்புவார் என்று கூறப்படுகிறது.
இறுதி நிகழ்வில் டிரம்ப்
அதாவது, துஷ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள டிரம்ப் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வழக்கினை மேற்பார்வையிடும் நியூயார்க் பெடரல் நீதிபதியிடம், டொனல்டு டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்ததால் கடும் விவாதம் உண்டானது.
மேலும், விசாரணையை தாமதப்படுத்த கோரிய மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் டிரம்ப் கலந்துகொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை.