கேலோ இந்தியா விழா.. மேடைக்கு சென்றபோது தடுமாறிய முதல்வர் ஸ்டாலின்.. கைத்தாங்கலாக பிடித்துக்கொண்ட பிரதமர் மோடி!
இந்திய அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இந்த முறை தமிழகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடக்க உள்ளது. அதற்கான துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்காக இன்று மாலை பெங்களூருவில் இருந்து புறப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாலை சுமார் 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அங்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு, புத்தகம் கொடுத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று ஜனவரி 19ஆம் தேதி துவங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள வீரர், வீராங்கனைகள் சுமார் 5500 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் திருச்சி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் புதிய பன்னாட்டு முனையம் ஒன்றை திறந்து வைக்க திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா மேடைக்குள் பிரதமர் மோடி அவர்களும் ஸ்டாலின் அவர்களும் கைகோர்த்து நடந்து சென்றனர். அப்பொழுது லேசாக தடுமாறி நின்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களை, கைத்தங்கலாக பிரதமர் மோடி அவர்கள் பிடித்துக் கொண்ட சம்பவம் ருசிகர சம்பவமாக மாறி உள்ளது.
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் பகிரிலாக பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.