இது தெரியுமா ? வயல்வெளிகளில் கடும் உழைப்பில் ஈடுபடும் மக்கள் இரவு சாப்பிடும் உணவில் திப்பிலியை அரைத்து…
மழைக்காலங்கில் ஏற்படும் தீராத இருமலுக்கு திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி ஒருபிடி எடுத்து 350மிலி தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சிய பின் அடியில் தேங்கி நிற்கும் திப்பிலியை தழையையும்,இளவறுப்பாய் வறுத்து பொடித்து வைத்து கொண்டு அதனுடன் சமஅளவு அரிசிப்பொடி சேர்த்து அதன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து மூவிரல் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.
திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு எடுத்து இரண்டையும் பொடித்து அரிசி கழுவிய கழுநீரில் 4கிராம் அளவில் காலையில் மட்டும் சாப்பிட பெண்களின் பெரும்பாடு, வெள்ளைத்தீரும். திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சமஅளவு எடுத்து தேன்விட்டு பிசைந்து காலை மாலை இலந்தைங்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட இளைப்பு நோய் தீரும். திப்பிலிப்பொடி மூவிரல் எடுத்துகம்மாறு வெற்றிலைச்சாறும் தேனும் சமஅளவு கலந்து சாப்பிட கோழை, இருமல், சுரம் தீரும். திப்பிலி சூரணம் கால் 5 கிராம் அளவில் எடுத்து பசும்பால் விட்டு காய்ச்சி சாப்பிட இருமல், வாய்வு, மூர்ச்சை நீங்கும்.
திப்பிலி 350 கிராம் மிளகு, சுக்கு வகைக்கு 175கிராம், பெருஞ்சீரகம், சீரகம் வகைக்கு 70 கிராம் அரத்தை 70 கிராம் லவங்கப்பட்டை 35 கிராம், ஓமம் 70கிராம், தாளிசம், லவங்கப்பத்திரி, திரிபலை, லவங்கம், ஏலம், சித்திரமூலம் அனைத்தையும் சர்க்கரை கலந்து தேன்விட்டு பிசைந்து ஒரு சிட்டிகை அளவு 40 நாட்கள் சாப்பிட இளைப்பு, ஈளை, இருமல், வாயு நீங்கும்.
திப்பிலி 70 கிராம், சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர், வாய்விடங்கம், கடுக்காய், மிளகு, வகைக்கு 9 கிராம் எடுத்து அதை இளம்வறுப்பாய் வறுத்து தேன், சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி பாகு பதத்தில் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரபாக்கு அளவில் நாள்தோறும் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வர இரைப்பு இருமல், தலை கிறுகிறுப்பு, நாவறட்சி, இளைப்பு குணமாகும்.
நீண்டநாள் தேமல் உள்ளவர்கள் திப்பிலியை தூள் செய்து ஒரு மாதம் தேனில் குழைத்து சாப்பிட தேமல் நீங்கும். திப்பிலி சூரணத்தை சர்க்கரையுடன் கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். திப்பிலி வேரை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கி கொடுக்க குறுக்குவலி, நாவறட்சி வளிநோய் போகும்.
கிராமங்களில் வயல்வெளிகளில் கடும் உழைப்பில் ஈடுபடும் மக்கள் இரவு சாப்பிடும் உணவில் திப்பிலியை அரைத்து குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடல் அசதி நீங்குவதுடன் மறுநாள் புத்துணர்ச்சியுடன் செயல் படுவார்கள். மிச சிறிய கொடியினமாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யாமல் மனிதர்களுக்கு பயன்படும் முறையை கண்டறிந்து நமக்கு சொல்லிய முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்