சிறு தானியங்களின் ராணியான ராகியை… யார் சாப்பிடலாம்.. யார் சாப்பிடக்கூடாது..!!
எலும்புகளை வலுப்படுத்தும் ராகி, நீரிழிவு ரத்த சோகை, உடல் பருமன், தூக்கப் பிரச்சினைகள், பதற்றம் போன்ற உடல் நல பிரச்சனை உள்ளவர்களுக்கு மாமமருந்தாக உள்ளது. கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. கேழ்வரகு மிக குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு வகையைச் சேர்ந்தது.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாகராகி மாவையே பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக் களஞ்சியமாக இருக்கும் இதில் அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. உடல் பருமன், ஒற்றைத் தலைவலி, இதய நோய், மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. ராகி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும், சிலர் இதனை சாப்பிடுவது பக்க விளைவையும் கொடுக்கும். இந்நிலையில், ராகியை யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Ragi Benefits)
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ராகி:
ராகியில் நல்ல அளவு பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு மற்ற தானியங்களை விட குறைவாக உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. காலை உணவாக ராகி தோசை அல்லது இட்லியை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வியக்கத்தக்க பலன்களை பெறுவீர்கள்.
இரத்த சோகையை நீக்கும் ராகி:
ராகி சாப்பிடுபவர்களின் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்காது. ராகி சாப்பிடுவதால் உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். இரத்த சோகை நோயாளிகள் கண்டிப்பாக ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு ராகி ஒரு நல்ல உணவு.
தூக்கம் மற்றும் மனச்சோர்வை நீக்கும் ராகி:
மன அழுத்தத்தை குறைக்கும் ராகியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவதால், கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும். ராகியை தினமும் சாப்பிட்டு வந்தால் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.