கடலை மிட்டாய் கணக்காக கார்களை உற்பத்தி பண்ணி தள்றாங்க! காஃபி வர்றதுக்குள்ளயா! மிரள வைத்த பிரபல நிறுவனம்!

வால்வோ (Volvo) கார் நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான மைல்கல் (Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது. இந்தியாவில் 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்திருப்பதுதான் அந்த மைல்கல் ஆகும். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகருக்கு அருகே உள்ள ஒசகோட்டை பகுதியில் வால்வோ கார் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்குதான் 10 ஆயிரம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை வால்வோ நிறுவனம் கடந்துள்ளது. இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை வால்வோ நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. அப்போது உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) ஆகும்.

தற்போது 10 ஆயிரமாவது காராக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) ஆகும். வால்வோ இந்தியா நிறுவனத்தின் பெங்களூர் தொழிற்சாலையில் தற்போது மொத்தம் 5 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அவை வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90), வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60), வால்வோ எஸ்90 (Volvo S90), வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) மற்றும் வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) ஆகியவை ஆகும். இதில், மிகவும் அதிகமாக தயாரிக்கப்பட்ட கார் என்றால், அது வால்வோ எக்ஸ்சி60-தான்.

வால்வோ நிறுவனம் இந்தியாவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வால்வோ எக்ஸ்சி60 கார்களை தயாரித்துள்ளது. தற்போது 10 ஆயிரமாவது காராக உற்பத்தி செய்யப்பட்டுள்ள வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு காராக திகழ்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் விலை (Price) 57.90 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில், 78kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 418 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

150kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 33 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் 50kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரி 100 சதவீதம் முழுமையாக நிரம்ப 2.5 மணி நேரம் வரை ஆகும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *