சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்து கொண்ட மஹிந்திரா.. நல்லா விற்பனையாகிட்டு இருக்க நேரத்துல இது தேவையா?
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra) அதன் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் ஒன்றின் விலையை அதிரடியாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த மாடல்? எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றே தார் (Thar) ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆஃப்-ரோடு (Off Road) பயணத்தை அதிகம் மேற்கொள்வோர் மத்தியில் இந்த காருக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் இந்த செயல் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொண்டதைப் போல் இருக்கின்றது. நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இதன் விலையை மஹிந்திரா உயர்த்தி இருப்பதானாலேயே இவ்வாறு நம்மை அதன் செயல் நினைக்கச் செய்திருக்கின்றது.
ஆனால், இந்த விலை உயர்வால் இந்த காரின் விற்பனையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ரூ. 34 ஆயிரத்து 699 வரை இந்த காரின் விலையில் ஏற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அதீத விலை உயர்வு தார் கார் மாடலின் ஏஎக்ஸ் (ஓ) ஹார்ட் டாப் டீசல் எம்டி 4 வீல் டிரைவ் ஆப்ஷனுக்கே பொருந்தும்.
அதேவேளையில், தார் கார் மாடலின் என்ட்ரீ லெவல் மாடலான எல்எக்ஸ் ஹார்ட் டாப் பெட்ரோல் ஏடி ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட தேர்வின் விலையில் ரூ. 22,899 மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அதாவது, தார் விலையில் ரூ. 22,899 தொடங்கி ரூ. 35 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதன் விளைவாக தார் காரின் ஆரம்ப விலை ரூ. 11.25 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ. 17.20 லட்சமாக அதிகரித்திருக்கின்றது. இதேபோல், மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய மற்ற எஸ்யூவி கார்களின் விலையையும் உயர்த்தியிருக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என், ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றின் விலையையும் மஹிந்திரா உயர்த்தி இருக்கின்றது.
இருப்பினும் தார் காரின் விலை உயர்ந்திருப்பதுதான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக இருக்கின்றது. ஆஃப்-ரோடு பிரியர்களுக்கு ஏற்ற வாகனமாகவும் மஹிந்திரா தார் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு ஆஃப்ஷன்களை அது வழங்கி இருக்கின்றது.
இருப்பினும் தார் காரின் விலை உயர்ந்திருப்பதுதான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக இருக்கின்றது. ஆஃப்-ரோடு பிரியர்களுக்கு ஏற்ற வாகனமாகவும் மஹிந்திரா தார் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு ஆஃப்ஷன்களை அது வழங்கி இருக்கின்றது.
இத்துடன், 2.0 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன. கியர்பாக்ஸ் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில் 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட டீசல் தார் காருக்கு நாட்டில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
அதற்கு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 17 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கு போட்டியாக தற்போதைய நிலவரப்படி சந்தையில் ஃபோர்ஸ் கூர்கா மற்றும் மாருதி சுஸுகியின் ஜிம்னி இருக்கின்றது.