VidaaMuyarchi: அசுர வேகத்தில் அஜித்… முடிவுக்கு வரும் விடாமுயற்சி… எல்லாமே அதுக்காக தானா..?
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து விரைவில் விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன.
அசுர வேகத்தில் அஜித்: அஜித்தின் ஏகே 62 திரைப்படம் விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு இறுதியில் தொடங்கியது. இதுவரை இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 24ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜானில் ஆஜராகிவிட்டனர்.
ஜனவரி 24ல் தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளதாம். ஏற்கனவே அஜித்தின் காட்சிகளை பாதிக்கும் மேல் ஷூட் செய்துவிட்டாராம் மகிழ் திருமேனி. அதுபோக மிச்சமிருக்கும் அஜித்தின் மொத்த போர்ஷனையும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என பிளான் செய்யப்பட்டுள்ளதாம். விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து 3 முறை தான் பிரேக் எடுத்துள்ளார் அஜித்.
அதனால் அவரது காட்சிகளை பெரும்பாலும் முடித்துவிட்டார் மகிழ் திருமேனி. அதேபோல், அஜித் – அர்ஜுன், அஜித் – த்ரிஷா என இந்த காம்போவில் வரும் காட்சிகளும் ஓரளவு முடிந்துவிட்டதாம். இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் ஆளாக அஜித் தான் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரிக்குள் அஜித் போர்ஷனும், மார்ச் இறுதிக்குள் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் ரெடியாகிவிட்டாராம். அதனால் தான் விடாமுயற்சியில் அஜித்தின் பகுதியை மட்டும் அவசரமாக எடுத்து வருகிறார் மகிழ் திருமேனி. அதன்பின்னர் மற்ற போர்ஷனை ஷூட் செய்துவிட்டு, ஒரே மாதத்தில் எடிட்டிங் உட்ப்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடிக்கவுள்ளாராம்.
அப்போது தான் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறையும் தொடங்கிவிடும் என்பதால், சம்மர் ஸ்பெஷலாக விடாமுயற்சியை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபார்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று, பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.