Salaar On Netflix: நெட்பிளிக்ஸில் வெளியான சலார்… ஓடிடி ரசிகர்கள் பண்ண சம்பவத்த பாருங்க!
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான சலார் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியானது. அதன்படி நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சலார் திரைப்படம் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்தப் படத்துக்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடியிலும் பெரிய சக்சஸ் கிடைத்துள்ளது.
நெட்பிளிக்ஸில் வெளியானது சலார்: பான் இந்தியா ஹீரோ பிரபாஸ் – கேங்ஸ்டர் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான திரைப்படம் சலார். கேஜிஎஃப் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் பேனரில் சலார் இயக்குநராக கமிட்டானார் பிரசாந்த் நீல். இதில் பிரபாஸ் ஹீரோவாக கமிட்டானது முதல் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்பட்டது. இதனால் சலார் ரிலீஸுக்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
அதேநேரம் கிராபிக்ஸ் வேலைகள் தாமதமானதால் சலார் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக டிச.22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது பிரபாஸின் சலார். அதன்படி, தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளில் ரிலீஸான சலார், ஷாருக்கானின் டங்கி படத்துக்கு செம்ம டஃப் கொடுத்தது. இதனால் ஆல் இந்தியா பாக்ஸ் ஆபிஸிலும் சலார் கெத்து காட்டியது.
முதல் நாளில் 178 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 117 கோடியும் வசூல் செய்த சலார், தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. அதன்படி மொத்தம் இதுவரை 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது சலார் திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் மட்டுமே ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சலார் ஓடிடி ரிலீஸ் குறித்து திடீரென நேற்று தான் அபிஸியலாக அறிவிப்பு வெளியானது. அப்போது முதல் திரையரங்குகளில் சலார் படத்தை மிஸ் செய்த ரசிகர்கள், ஓடிடியில் பார்த்துவிட முடிவு செய்தனர். இதனால் நள்ளிரவு வரை காத்திருந்து விடிய விடிய சலார் படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இதனால் சலார் ஆன் நெட்பிளிக்ஸ் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் சலார் படத்தை ஓடிடியில் பார்த்த வீடியோ, ஸ்க்ரீன் ஷாட்ஸ் ஆகியவற்றை ரசிகர்கள் டிவிட்டரில் வைரலாக்கி வருகின்றனர். திரையரங்குகளை கடந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது சலார். இதனால், பிரபாஸ் மட்டுமின்றி சலார் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள கல்கி படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.