ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை 47 கோடியைக் கடந்தது
1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜியோ சேவையில இணைந்துள்ளனர். இதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 47 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ( Reliance Industries (RIL)) ஒரு அங்கமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், 2023 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த, இந்த நிதியாண்டின் 3வது காலாண்டிற்கான நிதி செயல்பாட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான ( 11.2 million) சந்தாதாரர்கள் ஜியோவின் கீழ் வந்துள்ளனர். இது, கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும். அதேபோன்று, இந்த காலாண்டில் 38.1 பில்லியன் ஜிபி டேட்டா பயன்படுத்தப்பட்டதாகவும், 1.37 ட்ரில்லியன் நிமிடங்கள் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 3வது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் முழுமையான நிகர லாபம் ரூ.5,208 கோடி ஆகும். இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 12.3 சதவிகிதம் அதிகமாகும்.
மேலும், கடந்த 3 மாதத்தில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் செலுத்துதலுக்கு முந்தைய வருமானம் (EBITDA) மட்டும் 12 % அதிகரித்துள்ளதாகவும், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் (Revenue from operations) 10.3 % அதிகரித்து 25,368 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது