ராமர் முத்திரையா? வைரலாகும் 57 ஆண்டுகள் பழமையான தபால்தலை வரலாறு என்ன?
அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு மத்தியில், நேபாளம் 1967ஆம் ஆண்டு வெளியிட்ட தபால்தலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது இந்த முத்திரை யாரிடம் இருக்கிறது என்பதுதான் பலரின் கேள்வி. அது எங்கிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த அரிய முத்திரை தற்போது லக்னோவை சேர்ந்த அசோக் குமார் என்பவரின் வசம் உள்ளது. அதை அவர் தனது ‘தி லிட்டில் மியூசியம்’-ல் பாதுகாத்து வைத்துள்ளதாக கூறுகிறார். மேலும் இந்த முத்திரைக்கு பின்னால் ஒரு ரகசியம் மறைந்திருப்பதால் அரிதானது என்று கூறப்படுகிறது.
ரகசியம் என்ன?
இயல்பாகவே இந்தக் கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். உண்மையில், இந்த 57 ஆண்டுகள் பழமையான தபால்தலை நேபாளத்தில் உள்ள ராமரின் உறவினர்களிடமிருந்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. 1967-ல் வெளியிடப்பட்டதாக கருதப்படும் இந்த முத்திரை, ராமர் மற்றும் சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். தற்செயலாக, ராமர் கோயில் ஸ்தாபனம் எழுதப்பட்ட இடத்தில் இந்த 15 பைசா தபால்தலையில் ராம நவமி 2024 என்று எழுதப்பட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
‘தி லிட்டில் மியூசியம்’-ன் உரிமையாளர் அசோக் குமார் கூறுகையில், ‘இந்த முத்திரை 1967-ல் நேபாளத்தில் வெளியிடப்பட்டது. இங்கு ராமர் வில் அம்பு ஏந்திய நிலையில் காட்சியளிக்கிறார். மேலும், சீதாவும் அவருக்கு முன்னால் இருக்கிறார். அந்த 15 பைசா முத்திரையில் ராம நவமி 2024 என்று எழுதப்பட்டுள்ளது. உண்மையில், இது 18 ஏப்ரல் 1967 அன்று ராம நவமியின் போது வெளியிடப்பட்டது. இந்த முத்திரையை பல ஆண்டுகளுக்கு முன் ஒருவரிடம் இருந்து வாங்கினேன்’ என்று அசோக்குமார் கூறுகிறார்.
57 ஆண்டுகள் பழமையான தபால்தலையில் ராம நவமி 2024 என்று எழுதப்பட்டது ஏன்?
இதற்கு பதிலளித்த அசோக்குமார், ‘வைரலாகும் நேபாளி முத்திரை ஆங்கில நாட்காட்டியின்படி எழுதப்படவில்லை. மாறாக விக்ரம சம்பத்தின் படி எழுதப்பட்டுள்ளது. மேலும் விக்ரம சம்பத் ஆங்கில நாட்காட்டியை விட 57 வருடங்கள் முன்னால் உள்ளது. இவ்வாறு 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால்தலையில் 2024 என்பது 57 வருடங்கள் முன்னே எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் ராமர் கோயில் கட்டப்பட்ட காலம் பல ஆண்டுகளுக்கு முன்பே விவரிக்கப்பட்டது என்று கூறலாம்’ என்கிறார் அசோக்குமார்.