பழைய மற்றும் புதிய வரி முறைகளின் கீழ் வருமான வரியை கணக்கீடு செய்வது எப்படி? கைட்லைன்ஸ் இதோ

இடைக்கால பட்ஜெட் ஒரு சில நாட்களில் வர இருப்பதால் வருமான வரி எக்ஸம்ப்ஷன் வரம்புகள் அனைவரது கவனமும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரியில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று அனைத்து வரி செலுத்துவோரும் காத்திருக்கின்றனர்.

அனைத்து வரி செலுத்துவோர் குறிப்பாக முதல் முறையாக வருமான வரியை தாக்கல் செய்வோருக்கு பழைய வரி முறையை பின்பற்ற வேண்டுமா அல்லது புதிய வரி முறையை பின்பற்ற வேண்டுமா? என்ற குழப்பம் இருந்து வருகிறது.

கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டதின்படி, ஏப்ரல் 1, 2023 அன்று அமலாக்கம் செய்யப்பட்டதில், புதிய வரி முறையின்படி அடிப்படை விலக்க வரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 87A-இன் கீழ் உள்ள தள்ளுபடி 5 லட்சத்திலிருந்து 7 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

புதிய வருமான வரி முறையின் கீழ் வரக்கூடிய 6 வருமான வரி வரம்புகள் பின்வருமாறு:

ரூ.3,00,000 வரையிலான தொகைக்கு வருமான வரி கிடையாது

ரூ.3,00,001 முதல் ரூ.6,00,000 வரை 5%

ரூ.6,00,001 முதல் ரூ.9,00,000 வரை 10%

ரூ.9,00,001 முதல் ரூ.12,00,000 வரை 15%

ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரை 20%

15,00,001 ரூபாய்க்கும் மேல் 30%

புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்கள் இருந்தாலும் எக்ஸம்ப்ஷன்கள் மற்றும் டிடக்ஷன்கள் இதில் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பழைய வரி முறையில் அதிக வரி விகிதங்கள் இருந்தாலும் பல்வேறு டிடக்ஷன்கள் அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 2023-24 நிதியாண்டிற்கு பழைய வரி முறையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. FY 2019-2020 நிதியாண்டு வரை இந்தியாவில் நான்கு வரி வரம்புகள் கொண்ட ஒரே ஒரு வரி முறையே பின்பற்றப்பட்டது.

60 வயதிற்கு உட்பட்டோருக்கான அடிப்படை வருமான விலக்க வரம்பு 2.5 லட்ச ரூபாய். இதுவே 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 80 வயதிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 3 லட்ச ரூபாயாக உள்ளது. 80 வயதை அடைந்த சீனியர் சிட்டிசன்களுக்கான அடிப்படை விலக்க வரம்பு என்பது 5 லட்சம் ரூபாய்.

வரிகளை எவ்வாறு கணக்கீடு செய்ய வேண்டும்?

மொத்த வருமானம்

உங்களது மொத்த வருமானம் அதாவது அடிப்படை வருமானம், சலுகைகள், போனஸ் மற்றும் பிற கூறுகளை மனதில் வைத்துக் கொண்டு கணக்கீடு செய்ய துவங்குங்கள்.

விலக்கங்கள்

உங்களது வருமானத்தில் உள்ள ஒரு சில கூறுகளை வருமான வரியிலிருந்து விலக்கிக் கொள்ளலாம். ஹவுஸ் ரெண்ட் அளவன்ஸ், லீவ் டிராவல் அளவன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் போன்றவை இதில் அடங்கும். உங்களது மொத்த வருமானத்தில் இருந்து இவற்றை கழித்துக் கொள்ளுங்கள்.

டிடக்ஷன்கள்

வருமான வரி சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி செலுத்துவோர் டிடக்ஷன்களை கிளைம் செய்து கொள்ளலாம். எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட், PPF, லைஃப் இன்சூரன்ஸ், வீட்டுக் கடன் வட்டி மற்றும் பல இந்த டிடக்ஷன்களின் கீழ் வரும்.

வரிக்கு உட்பட்ட வருமானம்

பல்வேறு எக்சம்ப்ஷன்கள் மற்றும் டிடக்ஷன்களை கழித்தது போக நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானத்தை இப்பொழுது உங்களால் கணக்கீடு செய்ய இயலும். அதன் பிறகு வருமான வரி வரம்பு விகிதங்களின் அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதை கணக்கிடலாம். வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள கால்குலேட்டரில் தேவையான விவரங்களை நிரப்புவதன் மூலமாகவும் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *