ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தமா?.. மௌனம் கலைத்த விஜய் தேவரகொண்டா.. என்ன இப்படி சொல்லிட்டாரு?
ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டாவுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இந்த சூழலில் அந்தத் தகவல் குறித்து விஜய் தேவரகொண்டா புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவழியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருப்பதாகவும், இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து அதனை ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே அவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது.
மீண்டும் வதந்தி: இந்த சுழலில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒரே வீட்டில் வசிப்பதாக தகவல் பரவிய சூழலில் அவர்கள் இரண்டு பேருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக புதிய பேச்சு ஒன்று கடந்த சில வாரங்களாகவே எழுந்திருந்தது. ஆனால் அதுகுறித்து ராஷ்மிகா மந்தனா வாய் திறக்காமல் இருக்கிறது. அதேசமயம் விஜய் தேவரகொண்டா அதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
தேவரகொண்டாவின் விளக்கம்: விஜய் தேவரகொண்டா அளித்திருக்கும் விளக்கத்தில், “பிப்ரவரி மாதத்தில் நான் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்துகொள்ளப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்திகளை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு கையோடு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் மீடியாக்கள் இருக்கின்றன” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.