மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.23-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம்..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடா்பான அறிவிப்பை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, அமைச்சா்கள், முதல்வரின் செயலா்கள் உள்ளிட்டோருக்கு அவா் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது.,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈரக்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் 28-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்லவிருக்கிறார். எனவே, முதலீடுகள், கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுப்பது தொடர்பான ஆலோசனை மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.