அயோத்தி ராமர் கோவிலுக்கு போறீங்களா ? பேடிஎம்யின் சூப்பர் ஆஃபர் ..!
உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு பல விமான நிறுவனங்களும், ரயில்வே துறையும் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
இந்நிலையில் அயோத்திக்கு செல்லும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேடிஎம் ஒரு அருமையான திட்டத்தைத் தொடங்கியுள்ளது, 1000 பேர் அயோத்திக்கு இலவச டிக்கெட்டைப் பெறுவார்கள் என அறிவித்துள்ளது.
நீங்கள் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், முதலில் Paytm செயலி மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். Paytm வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செயலி மூலம் பஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முதல் 1,000 பயனர்களுக்கு இலவச பஸ் டிக்கெட் கிடைக்கும். சலுகையைப் பெற, ‘BUSAYODHYA’ என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.