பல நோய்களுக்கு தீர்வளிக்கும் பாகற்காய்.!
காய்கறி வகைகளில் ஒன்று பாகற்காய். இதில் அதிகளவில் கசப்பு சுவை இருப்பதால், இதை பலரும் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
ஆனால் பாகற்காயில் பல்வேறு வகையான சத்துக்களும், நோயை தீர்க்கும் ஆற்றலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பாகற்காயில் உள்ள நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* பாகற்காயை நீரில் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் சரியாகும். * இந்தக் காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கபம், வாதம், பித்தம் போன்ற நோய்கள் தீரும்.
* வயிற்றுப் புண்கள், வயிற்றுப் பூச்சி, கல்லீரல் உள்ளிட்டவற்றிற்கு அருமருந்தாக இருந்து வருகிறது. * இதில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் போன்றவற்றை சரி செய்கிறது.
* பாகற்காய் சாப்பிடுவதால் பசி அதிகரித்து, வயிற்றில் அமிலங்கள் தேவையான அளவு சுரப்பதன் மூலம் செரிமான பிரச்சனையை சரி செய்கிறது. * மேலும், பருக்கள், சரும தொற்றுகள், தோல் நோய்கள், தழும்புகள் போன்றவை சரியாகும்.
* பாகற்காயில் உள்ள வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நோயை கட்டுப்படுத்துகிறது. * உடலில் அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் வழிவகை செய்கிறது.