அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
என்ற திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது படத்தின் பட்ஜெட்டில் மட்டும் சுமார் 70% என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன், ரக்ஷித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.