ஸ்ரீராமநவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொது விடுமுறையா? சென்னை ஹைகோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம்
சென்னை: ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கும்படி மத்திய அரசிற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீராம நவமி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட கோரி கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில்,ஸ்ரீராம நவமி, சிவராத்திரி ஆகிய பண்டிகைகளை கொண்டாடும் வகையில் அந்த நாட்களை பொது விடுமுறையாக அறிவிக்கும் வேண்டும் என்றும், இது தொடர்பாக கடந்த 2023 அக்டோபர் 14ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர்,சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர்,நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காததால் அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராம நவமி, சிவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீராம நவமி, சிவராத்திரி பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட கோரி கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில்,ஸ்ரீராம நவமி, சிவராத்திரி ஆகிய பண்டிகைகளை கொண்டாடும் வகையில் அந்த நாட்களை பொது விடுமுறையாக அறிவிக்கும் வேண்டும் என்றும், இது தொடர்பாக கடந்த 2023 அக்டோபர் 14ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர் , சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காததால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்க பூர்வாலா, மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், மனுதாரர் தன்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலிக்க மத்திய அரசை அணுகலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.