நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. 3 பிரிவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதன்படி அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் ஐவர் குழுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவை நியமித்து, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி தி.மு.க. பொருளாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, ஆ.ராசா. எம்.பி., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் கனிமொழி கருணாநிதி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.,, எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், மருத்துவர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோரை நியமித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை குழுவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட இளையோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், கோவி. செழியன் திமுக வர்த்தக அணி துணைத் தலைவர், ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,ஆகிய புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *