முன்னாள் நீதிபதிகளுடன் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

புதுடெல்லி:மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இந்த குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை சந்தித்தார்.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோகினி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோரை அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் என்று கூறப்படுகிறது.ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் 10 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த 5-ம் தேதி கேட்டுக் கொண்டது.முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் 5 பேரிடம் கருத்து கேட்டு அந்த குழு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *