என்.சி.சி.,க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?: பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம்
புதுடில்லி: தேசிய உணர்வை வளர்க்கவும், தேசிய பெருமையை மேம்படுத்தவும் என்.சி.சி.,(தேசிய மாணவர் படை) உதவுகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் என்.சி.சி.,யில் இணைய வேண்டும்.
உடல் பயிற்சி உங்களை உடல் ரீதியாக வலிமையாக்கும்.
நீங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம். உங்கள் சமூகத் திறன்களை மேம்படுத்தும் மக்களுடன் பழகலாம்.தேசிய உணர்வை வளர்க்கவும், தேசிய பெருமையை மேம்படுத்தவும் என்.சி.சி., உதவுகிறது. இந்திய விடுதலை போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் ஆங்கிலேயர் தோட்டா தன் உடலில் புகுந்து உயிரிழந்து விடக்கூடாது என்று, தன்னைத்தானே சுட்டுக் கொன்று உயிரிழந்தார்.அப்போது தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. தேசப் பெருமை என்பது மனித இதயத்தின் வலிமையான உணர்வு. இவ்வாறு அவர் கூறினார்.