`உச்ச நீதிமன்ற வரலாற்றில் சிறப்புமிக்க நடவடிக்கை’ – 11 பெண்கள் மூத்த வழக்கறிஞர்களாக நியமனம்!
இந்தியாவின் கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக 11 பெண் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் நடைமுறைக்கு வந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ல் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட நீதிபதி இந்து மல்ஹோத்ரா, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
சந்திரசூட்
அதன்பிறகு, 2013-ல், மீனாட்சி அரோரா, கிரண் சூரி, விபா தத்தா மகிஜா ஆகியோர் மூத்த வழக்கறிஞர்களாகப் பதவியேற்றனர். 2015-ல் வி மோகனா, மகாலட்சுமி பவானி ஆகிய இரண்டு பெண் வழக்கறிஞர்களும், அதைத் தொடர்ந்து, 2006-ல் நீதிபதி சாரதா அகர்வால், 2015-ல் நீதிபதி ரேகா ஷர்மா ஆகிய ஓய்வு பெற்ற இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களாகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
மேலும், 2019-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரே நேரத்தில் ஆறு பெண் வழக்கறிஞர்களான மாதவி திவான், மேனகா குருசுவாமி, அனிதா ஷெனாய், அபராஜிதா சிங், ஐஸ்வர்யா பதி மற்றும் பிரியா ஹிங்கோராணி ஆகியோருக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கியது. இந்த வகையில், தற்போது வரை 12 மூத்த பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.