அம்பானி, ஷிவ் நாடார் போல் சுயம்புவாக பில்லியனராவது எப்படி..?! பாலோ செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!!
நீ என்ன ஆகப் போகிறாய்? என யாராவது கேட்டால் கோடீஸ்வரன் ஆகப் போகிறேன் என சொல்லிப்பாருங்கள், அதெல்லாம் அவ்ளோ ஈசி இல்ல என்ற பதில் தான் உங்களுக்கு கிடைக்கும்.
ஏனெனில் நல்ல படிப்பு, நல்ல வேலை என்பதை தாண்டி சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது பலரது கனவு.குறிப்பாக கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகள் மற்றும் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரிடமும் இந்த கனவு இருக்கிறது.
இந்த கனவை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் ஒரு துறையை தேர்வு செய்து அதில் நிபுணராவது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தயாரிப்பினை வழங்குவது ஆகியவை மட்டும் உங்களை கோடீஸ்வரராக மாற்றாது என்பது தான் இந்த உலகம் நமக்கு கற்றுத்தரும் பாடம். நாம் மாற வேண்டும் அதற்கேற்ப நமது முயற்சிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் இது தான் கோடீஸ்வரர் என்ற இலக்கை அடைய நமக்கு உதவி செய்யும்.
கோடீஸ்வரராவதை விட அந்த நிலையை தக்க வைத்து கொள்வது தான் மிகக் கடினம் என்பது உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் போது உங்களுக்கு தெரிய வரும்.சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? அந்த நிலையை தக்க வைத்து கொள்வது எப்படி? தனது குடும்பத்தில் ஒற்றை ஆளாக உழைத்து கோடீஸ்வரரானவர்கள் எப்படி அந்த நிலையை அடைந்தனர்? அதற்கு அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இந்த 10 வழிமுறைகளும், இலக்கை நோக்கி தெளிவான பாதை அமைக்க நிச்சயம் உங்களுக்கு உதவும்.விதிகளை கடுமையாக பின்பற்றுங்கள்: இந்த உலகில் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் 95% மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது 5% மக்கள்.
தனக்கென ஒரு கொள்கையை அமைத்து, அதற்கென விதிகளை தீர்மானித்து அவற்றை முறையாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்களால் தான் இந்த உலகம் ஆளப்படுகிறது.எனவே, உங்களுக்கென கொள்கைகளை வகுத்து கொள்ளுங்கள். என்ன சவால்கள் வந்தாலும் உங்கள் கொள்கைகளை ஒரு போதும் கைவிடாதீர்கள். கொள்கைகளை இறுகப்பற்றி விதிகளை சரியாக பின்பற்ற நீங்கள் செய்யும் தியாகங்கள், கண்டிப்பாக உங்களை வெற்றி வாசலில் கொண்டு சென்று நிறுத்தும்.
மாற்றங்களை கவனித்து செயல்பட வேண்டும்: “அவுட் ஆஃப் தி பாக்ஸ்” சிந்தனை, அதாவது அனைவரும் சிந்திக்கும் வழியை விட்டு மாற்று முறையில் சிந்திப்பது கோடீஸ்வரராக விரும்புவோரிடம் இருக்க வேண்டிய முக்கியமான தகுதி.வேகமாக செல்லும் இந்த உலகில் மக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.