அயோத்தி ராமர் கோயிலுக்கு படையெடுக்கும் FMCG நிறுவனங்கள்.. பணம், மொத்தமும் பணம்..!!
வட இந்தியாவின் புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்னதாக தடல்புடல் ஏற்பாடுகளை எப்எம்சிஜி நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அயோத்தியில் 22 ஆம் தேதி முதல் மக்கள் அலைமோத துவங்குவார்கள், இதன் மூலம் அயோத்தி FMCG நிறுவனங்களுக்கு பொக்கிஷமாக மாறப்போகிறது.பேக்கேஜ்டு உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் அயோத்தியில் தங்கள் தயாரிப்புகளின் விநியோகத்தை அதிகரித்து வருகின்றனர். அதே போல் விளம்பர பிரசாரங்களையும் முனைப்பாகச் செயல்படுத்துகின்றனர்.
Bisleri: பாட்டில் குடிநீர் பிராண்ட் பிஸ்லேரி நகரத்துக்கு செல்லும் அனைத்து சாலை வழிகளிலும் அயோத்தியில் உள்ள முக்கிய நுகர்வு மையங்களிலும் விநியோகத்தை அதிகரித்து வருகிறது. அயோத்தியில் பிஸ்லேரி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஒரு புதிய ஆலையை நிறுவுகிறது.முனிசிபல் அதிகாரிகளுடன் இணைந்து பயன்படுத்திய பிளாஸ்டிக்கை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
அயோத்தியில் ஒரு புதிய ஆலை வரவிருக்கிறது, அது சில மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்று பிஸ்லேரி இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி ஏஞ்சலோ ஜார்ஜ் கூறினார்.Ram Temple: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஏழு நாள் ‘பிரான் பிரதிஷ்டை’ மத சடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் கோயிலை திறந்து வைக்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தினசரி லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதால் அயோத்தியில் புதிய விமான நிலையம், சீரமைக்கப்பட்ட புதிய ரயில்நிலையம், அகலமான சாலைகள் மூலம் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதைக் கண்ட நிறுவனங்கள், நகரத்தில் பெரிய மதச் சுற்றுலாவை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளன.பேக்கேஜ் உணவு பொருட்களின் தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்புகளை சாம்பிள் செய்வதற்கும், ஏற்கனவே உள்ள பிராண்டுகளுக்கான சோதனைகளை உருவாக்குவதற்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.