SA20 : ”ஒரே கல்ப்” என்னென்ன பண்றாங்க பாருங்க.. நேரலையில் பெண் ரசிகை செய்த சேட்டை.. வர்ணனை வேற!
மும்பை கேப்டவுன் – பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெண் ரசிகையை நேரலையில் கேமராமேன் காட்டிய போது, அவர் பீரினை ஒரே கல்பில் அடித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
அண்மை காலமாக கிரிக்கெட் போட்டிகளின் போது கேலரியில் ரசிகர்கள் செய்யும் சேட்டைக்கு எல்லையில்லாமல் போகிறது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தனியாக ஒரு கேலரியில் அமர்ந்திருந்த காதலர்கள் இருவரும் சேட்டையை செய்த போது, திடீரென கேமரா மேன் அவர்கள் பக்கம் கேமராவை திருப்பினார்.
அதுமட்டுமல்லாமல் மெயின் ஸ்க்ரீனில் காதலர்களை காட்டியது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டது. அப்போது முகத்தை மூடி கொண்ட காதலர்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர். அந்த வீடியோ ட்ரெண்டாகியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் எஸ்ஏ20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை கேப்டவுன் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி விளையாடியது.
இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை விளாசியது. அதிகபட்சமாக பட்லர் 31 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். அதன்பின் களமிறங்கிய மும்பை கேப்டவுன் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை விளாசி வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 52 பந்துகளில் 6 சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பட 94 ரன்களை விளாசினார்.
பார்ல் ராயல்ஸ் அணியின் பேட்டிங் போது 14.1 ஓவரில் கேலரில் அமர்ந்திருந்த பெண் ரசிகை ஒருவர் கேமராவில் காட்டப்பட்டார். அதனையறிந்த அந்த பெண் ரசிகை, உடனடியாக அருகில் அமர்ந்திருந்த நண்பரின் கைகளில் இருந்த பீர் கோப்பையை எடுத்து, ஒரே கல்பில் குடித்து முடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இதனை பார்த்த வர்ணனையாளர்கள் உற்சாகத்தில் அதற்கும் சேர்த்து வர்ணனை கொடுக்க அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாகவே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மைதானங்களில் ரசிகர்கள் பீர் குடித்து கொண்டே கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருக்கும். இவ்வளவு கொண்டாட்டத்துடன் ரசிகர்கள் கிரிக்கெட்டை கொண்டாடுவது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.