பெரிய பெரிய கற்களாலான ரூஃப் இடிந்து விழுந்தும் காருக்கு எதுவும் ஆகல! இரும்பு கோட்டையைபோல கம்பீரமாக நின்ற கார்!
“மஹிந்திரா கார்களின் தரத்திற்கு இதுக்கு மேல ஒரு சான்று தேவையா” என கேட்கும் அளவிற்கு ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. அப்படி என்ன சம்பவம் அது? என்று தானே கேக்குறீங்க, மஹிந்திராவின் காரின் ஒன்றின்மீது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கின்றது.
இருப்பினும், அந்த காரின் மேற்கூரைக்கு ஒன்றுமே ஆகவில்லை. இந்த நிகழ்வு மஹிந்திரா காரின் அதீத உறுதித் தன்மையைக் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மஹிந்திரா தார் காரே இந்த விபத்தில் சிக்கிய வாகனம் ஆகும். இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது.
சொல்லப்போனால் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் தார் எஸ்யூவி இருக்கின்றது. இந்த கார் மீதே கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மேற்கூரை இடிந்து விழுந்தும் அந்த காரின் மேற்கூரை அப்படியே கம்பீரமாக, உருக்குலையாமல் இருக்கின்றது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளை வாகனங்கள் சந்திக்கும் எனில் மிகப் பெரிய அளவில் சேதங்களைச் சந்திக்க நேரிடும். குறைந்தபட்சம் மேற்கூரை மிகப் பெரிய அளவில் சொட்டையாவது ஆகும். ஆனால், இந்த காரின் மேற்கூரை சிறு சிறு சிராய்ப்புகளுடன் தப்பி இருக்கின்றது. சொல்லப்போனால் இந்த காரின் பெரும்பாலான கண்ணாடிகள் கூட அப்படியே இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
இத்தகைய கம்பீரமான காரா மஹிந்திரா தார் என்றே இந்த சம்பவம் நம்மை ஆச்சரியப்பட செய்திருக்கின்றது. கராஜில் நிறுத்தி வைத்திருந்தபோதே இந்த எதிர்பாராத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இது ஓர் ஹார்ட்டாப் தார் கார் ஆகும். இந்தியாவில் இந்த கார் ஹார்ட் டாப்புடன் சேர்த்து சாஃப்ட் டாப் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
தார் கார் விபத்து குறித்த தகவலை அந்த காரின் உரிமையாளர் ரத்தன் தில்லோன் என்பவரே வெளியிட்டு இருக்கின்றார். தன்னுடைய தார் காரின் உறுதித் தன்மையை உலகம் அறிந்திட அவர் இவ்வாறு செய்திருக்கின்றார். விபத்தில் காரின் வெளிப்புறம் எப்படி அப்படியே இருக்கின்றதோ, அதேபோல், அதன் இயக்க நிலையிலும் எந்த பாதிப்பும் இன்றி காணப்படுகின்றது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அந்த கார் ஒரே ஸ்டார்டிலேயே இயங்கத் தொடங்கிவிட்டது. இதனால் கார் உறுதித் தன்மைக் கொண்டது மட்டுமல்ல அதிக தரம்மிக்கது என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மஹிந்திரா தார் எஸ்யூவி ஓர் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும்.
2020 ஆம் ஆண்டில் இந்த காரை குளோபல் என்சிஏபி கடுமையான மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்விலேயே அது ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த கார் அதிக பாதுகாப்பானது மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய காராகவும் காட்சியளிக்கின்றது. இதனால், இந்த கார் ஆஃப்-ரோடு வாகன பிரியர்கள் மத்தியில் மட்டுமின்றி குடும்பங்களுக்கான வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. இன்றைய நவீன கால இளைஞர்களைக் கவரும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் ஏகப்பட்ட மாடர்ன் அம்சங்களை வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், பவர் விண்டோக்கள், மல்டி ஃபங்க்சன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 18 அங்குல அலாய் வீல் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களும் அந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்கள் குவிந்துக் கொண்டிருக்க காரணமாக இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் இந்த காரின் விலையை உயர்த்தியது. ரூ. 23 ஆயிரம் தொடங்கி ரூ. 35 ஆயிரம் வரையில் இதன் விலையை உயர்த்திவிட்டது, மஹிந்திரா நிறுவனம். இந்த செயல் பெருத்த அதிர்ச்சியை தார் கார் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.