இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! – இன்றைய ராசி பலன்கள்(20.01.2024)!

மேஷம்
இன்று அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.
உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9ரிஷபம்
இன்று தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்
இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி
இன்று எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *