இந்திய டெஸ்ட் அணியிலும் ரிங்கு சிங் இடம்பிடிக்க வாய்ப்பு.. ஏன் தெரியுமா? – தெளிவான விளக்கம் இதோ
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்ட வேளையில் மீதமுள்ள 3 போட்டிகளுக்கான அணி இரண்டாவது போட்டியின் முடிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இடம்பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் அற்புதமாக செயல்பட்ட ரிங்கு சிங் தனது முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளார்.
அதோடு உத்தர பிரதேசத்தை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான இவர் இந்திய ஏ அணிக்காகவும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார். இப்படி இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த இவரை இந்திய டெஸ்ட் அணியிலும் சேர்க்க தேர்வுக்குழு ஒரு கண் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் உத்தரபிரதேச ஆடிக்காக 43 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள அவர் 3099 ரன்களை 58 ரன்கள் சராசரியுடன் விளாசியுள்ளார். அதில் 7 சதமும் 20 அரை சதங்களும் அடங்கும்.
அதோடு ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 71 என்பதனால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதே வேகத்தில் விளையாடும் பட்சத்தில் அது அணியின் ரன் குவிப்பிற்கும் உதவும் என்பதனாலேயே அவரை டெஸ்ட் அணியில் கொண்டு வர இந்திய அணி விருப்பம் காட்டும் என்று தெரிகிறது.